பிரபல சமூக ஊடகச் செயற்பாட்டாள ‘ரட்டா’ கைது!

Ratta photo

பிரபல சமூக ஊடகச் செயற்பாட்டாளரும் அமைதியான போராட்ட இயக்கத்தின் முன்னணிச் செயற்பாட்டாளருமான ‘ரட்டா’ என அழைக்கப்படும் ரனிந்து சேனாரத்ன பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இவர் கொம்பனித்தெருப் பொலிஸாரால் இன்று கைதுசெய்யப்பட்டுள்ளார்.

கடந்த சில நாட்களுக்கு முன் கோட்டை நீதிவான் நீதிமன்றத்துக்கு முன்பாக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின்போது பொலிஸாருக்கும், நீதித்துறைக்கும் இடையூறு ஏற்படுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காகக் கொம்பனித்தெருப் பொலிஸ் நிலையத்துக்கு அவர் இன்று அழைக்கப்பட்டிருந்தார்.

எனினும், சுமார் 2 மணிநேரம் வரை வாக்குமூலம் வழங்கிய அவர், பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

#SriLankaNews

Exit mobile version