இலங்கையில் கொரோனாவின் தாக்கம் வீரியமடைந்து வரும் நிலையில், தற்போது எலிக்காய்ச்சல் அச்சுறுத்தலாய் மாறியுள்ளது.
குறித்த எலிக்காய்ச்சலால் கடந்த 12ம் திகதி மொனராகலை மாவட்டத்தில் சிறுவன் ஒருவன் உயிரிழந்துள்ளான்.
மொனராகலை மாவட்ட பொது வைத்தியசாலையில் எலிக் காய்ச்சலினால் பாதிக்கப்பட்டு 14 நாட்கள் வரை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த பாடசாலை மாணவனே உயிரிழந்துள்ளதாக மருத்துவமனையின் வைத்திய அதிகாரி தனபால ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
எதிமலை 60ஆம் பிரிவு ஜயமினிகம பிரதேசத்தைச் சேர்ந்த உதிமலை மகா வித்தியாலயம், 11ஆம் தரத்தில் கல்வி கற்று வந்த டப்ள்யூ. எம். முத்திக்க லக்மால் என்பவரே உயிரிழந்துள்ளார்.
#SrilankaNews
Leave a comment