அரிய வகை கிளி மீட்பு!

image 9c4f4ad638

அரிய வகையைச் ​சேர்ந்த கிளியொன்றை, வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் மீட்டெடுத்துள்ளனர்.

வீடொன்றுக்குள் மறைத்துவைக்கப்பட்டிருந்த பாதுகாப்பான பறவைகளில் ஒன்றான (plum heeded parakeet ) என்ற இனத்தை ​சேர்ந்த கிளியொன்றை, வன ஜீவராசிகள் திணைக்களத்தின் அதிகாரிகள் மாத்தளை களுதாவளை பிரதேசத்தில் மீட்டுள்ளனர்.

கிடைத்த தகவலுக்கு அமைய, கடந்த 9ஆம் திகதியன்று அவ் வீட்டை சுற்றிவளைத்த அதிகாரிகள், கிளியை மறைத்து வைத்திருந்தவரையும் கைது செய்துள்ளனர்.

கைதான நபரை மாத்தளை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

மாத்தளை மாவட்டத்தை பொருத்தவரையில் இவ்வாறான கிளியொன்றை முதல் தடவையாக தாங்கள் மீட்டெடுத்துள்ளதாக வனஜீவராசிகள் திணைக்களத்தின் அதிகாரிகள் தெரிவித்தனர்.

#SriLankaNews

Exit mobile version