ரஞ்சித் சியம்பலாப்பிட்டியவின் நாடாளுமன்ற அரசியல் பயணம்….!

ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய 1 1

✍️ 1998 – ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் ருவன்வெல்ல தொகுதி அமைப்பாளராக நியமனம்.

✍️ 2000 – நாடாளுமன்ற அரசியல் பயணம் ஆரம்பம். கேகாலை மாவட்டத்தில் களமிறங்கி, 49,585 வாக்குகளுடன் வெற்றிநடை. 2001 இல் நடைபெற்ற பொதுத்தேர்தலிலும் வெற்றிமகுடம் சூடி சபைக்கு தெரிவு.

✍️’2004 – பொதுத்தேர்தலில் 80, 236 வாக்குகளைப் பெற்று மீண்டும் சபைக்கு வருகை.. நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சு பதவியும் வகிப்பு.

✍️’2007- நிதி மற்றும் அரச வருமான அமைச்சராக பதவியேற்பு.

✍️’2010 – பொதுத்தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணி சார்பில் போட்டி, 146,623 விருப்பு வாக்குகளுடன் பெரு வெற்றி.

✍️’2015 – பொதுத்தேர்தலிலும் வெற்றிலை சின்னத்தில் களமிறங்கி வெற்றிநடை.

✍️’மைத்திரி அணி உறுப்பினர் என்பதால், விருப்பு வாக்கு பட்டியலில் நான்காவது இடத்துக்கு பின்தள்ளப்பட்டார். (62,098 வாக்குகள்)

✍️’தேசிய அரசு உதயமானதால், மைத்திரி – ரணில் ஆட்சியில் அமைச்சு பதவி வகிப்பு.

✍️’2020 – மொட்டு சின்னத்தில் போட்டி. 103,300 விருப்பு வாக்குகளைப் பெற்று நாடாளுமன்றம் தெரிவு.

✍️’2020 – பிரதி சபாநாயகராக ஏகமனதாக தெரிவு.

✍️’2022.04. 30 – பிரதி சபாநாயகர் பதவி துறப்பு.

✍️’2022. 05. 05. – பிரதி சபாநாயகருக்கான தேர்வில் வெற்றி. 148 உறுப்பினர்கள் ஆதரவாக வாக்களிப்பு.

✍️’2000 ஆம் ஆண்டு முதல் இற்றைவரை நாடாளுமன்றத்தில் தொடர்ச்சியாக அங்கம் வகிப்பு.

✍️’கொழும்பு றோயல் கல்லூரி மாணவர். ஶ்ரீஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றவர்.

ஆர்.சனத்

#SriLankaNews

Exit mobile version