அரசியல் பழிவாங்கல்களை விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் இறுதி பரிந்துரைகளை வலுவிழக்கச் செய்யும் எழுத்தாணை உத்தரவை பிறப்பிக்குமாறு கோரிய மனுவை எதிர்வரும் ஜனவரி மாதம் 28 ஆம் திகதி விசாரணை செய்ய மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.
இந்த மனு நிஸங்க பந்துல கருணாரத்ன, தேவிகா அம்பரத்ன மற்றும் டி.எம்.சமரக்கோன் ஆகிய மூவரடங்கிய நீதிபதிகள் குழாம் முன்னிலையில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
மனு மீதான விசாரணைகள் நிறைவடையும் வரை, பரிந்துரைகளை வலிவிழக்கச் செய்யுமாறு ரணில் விக்ரமசிங்க தனது மனுவில் கோரிக்கை விடுத்துள்ளார்.
ஆணைக்குழு தனது விசாரணைகளை மேற்கொண்ட விதம் முற்றிலும் சட்டவிரோதமானது என மனுவில் குற்றஞ்சுமத்தப்பட்டுள்ளது.
இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு செய்த முறைப்பாடுகளுக்கு தாம் பொறுப்புக்கூற வேண்டும் என ஆணைக்குழுவின் இறுதி பரிந்துரைகளில் தெரிவிக்கப்பட்டுள்ளமையை ரணில் விக்ரமசிங்க உயர் நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டியிருந்தார்.
ஆணைக்குழுவில் ஆஜராகி விடயங்களை தௌிவுபடுத்துவதற்கு போதுமான கால அவகாசம் வழங்காமையானது, நாட்டின் சட்டத்திற்கு மாத்திரமின்றி தர்மத்திற்கும் முரணான செயல் என ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.
#SriLankaNews
Leave a comment