7 29
இலங்கைசெய்திகள்

ரணிலுக்கே மக்களின் பெரும்பான்மை ஆதரவு: இராஜாங்க அமைச்சரின் கணிப்பு

Share

ரணிலுக்கே மக்களின் பெரும்பான்மை ஆதரவு: இராஜாங்க அமைச்சரின் கணிப்பு

வரலாற்றில் மிக மோசமான பொருளாதார நெருக்கடியிலிருந்து நாட்டை மீட்டெடுத்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு (Ranil Wickramasinghe) எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் மக்கள் ஆதரவளிக்கத் தயாராக இருப்பதாக கைத்தொழில் இராஜாங்க அமைச்சர் சாமர சம்பத் தசநாயக்க (Chamara Sampath Dassanayake) தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி ஊடக மையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

“வரலாற்றில் மிக மோசமான பொருளாதார நெருக்கடிக்குள் தள்ளப்பட்ட நாடு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் கீழ் இரண்டு வருடங்கள் என்ற குறுகிய காலத்திற்குள் மீட்கப்பட்டுள்ளது.

அதற்கிணங்க, எமது அமைச்சின் கீழுள்ள நிறுவனங்கள் நட்டமடையும் நிலையை தவிர்த்து இலாபம் ஈட்டும் நிலைக்கு வந்துள்ளன.

உலகில் கடுமையான பொருளாதார நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ள ஏனைய நாடுகள் இவ்வளவு குறுகிய காலத்தில் பொருளாதார ஸ்திரத்தன்மையை எட்டவில்லை.

இந்த ஸ்திரத்தன்மையை பேணுகின்ற அதேவேளை பொருளாதாரத்தை மேலும் அபிவிருத்தி செய்வதற்கு அனைத்து தரப்பினரும் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும்.

மேலும், அரசாங்கத்தின் வருமானத்தை அதிகரிக்கும் வகையில் கடந்த காலத்தில் கொண்டு வரப்பட்ட வரித் திருத்தங்கள் குறித்தும் மக்கள் மத்தியில் சில எதிர்ப்புகள் எழுந்தன.

ஆனால், அந்த முடிவுகளின் நன்மைகளை மக்கள் பெறும்போது, அந்த எதிர்ப்பு மறைந்துவிடும். உலகில் உள்ள ஏனைய நாடுகள் நம் நாட்டை விட அதிக சதவீத வரிகளை வசூலிக்கின்றன என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்.

கடந்த நெருக்கடியின் போது, மக்களிடம் பணம் இருந்தது. ஆனால் வாங்குவதற்கு பொருட்கள் பற்றாக்குறையாக இருந்தது. ஆனால் தற்போது அவ்வாறான நிலை இல்லை.

எனினும், இரண்டு வருடங்களுக்கு முன்னர் நாட்டின் நிலைமையை நாம் யாரும் மறந்துவிடவில்லை. எனவே எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்ரமசிங்கவிற்கு எமது ஆதரவை வழங்குவோம்” எனக் கூறியுள்ளார்.

Share
தொடர்புடையது
Untitled 68
செய்திகள்இலங்கைபிராந்தியம்

காலி – தெலிக்கடையில் பயங்கரம்: ஆணும் பெண்ணும் வெட்டிக் கொலை – ஓய்வுபெற்ற இராணுவ வீரர் கைது!

காலி, தெலிக்கடை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் இன்று (ஏப்ரல் 03, 2026) அதிகாலை இடம்பெற்றதாகக் கூறப்படும்...

Untitled 67
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கைச் சுற்றுலாவில் 19.7% சரிவு: மார்ச் மாதத்தில் வருகை தந்த பயணிகளின் எண்ணிக்கை வெளியீடு!

இலங்கைச் சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை (SLTDA) வெளியிட்டுள்ள சமீபத்திய அறிக்கையின்படி, 2026 மார்ச் மாதத்தில்...

Untitled 66
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சம்பா அரிசி தட்டுப்பாட்டுக்குத் தீர்வு: பொன்னி மற்றும் கீரி பொன்னி இறக்குமதிக்கு அரசாங்கம் அனுமதி!

இலங்கையில் நிலவும் சம்பா மற்றும் கீரி சம்பா அரிசி தட்டுப்பாட்டைப் போக்கி, சந்தையை நிலைப்படுத்துவதற்காக விசேட...

Untitled 65
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சிலாபத்தில் பாரிய இணையவழி நிதி மோசடி: 147 வெளிநாட்டுப் பிரஜைகள் அதிரடி கைது!

இலங்கையின் சிலாபம், இரணாவில பகுதியில் உள்ள நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்து, சர்வதேச ரீதியிலான ஒழுங்கமைக்கப்பட்ட...