27
இலங்கைசெய்திகள்

தனது அரசியல் நிலைப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்திய ரணில்

Share

தனது அரசியல் நிலைப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்திய ரணில்

ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான கூட்டணிக்கு தாம் தலைமைத்துவம் வழங்கிய போதிலும் பொது தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

கடந்த ஜனாதிபதி தேர்தலில் ஏற்பட்ட தோல்வியை அடுத்து ரணில் விக்ரமசிங்க இந்த தீர்மானத்தை மேற்கொண்டுள்ளார். எனினும் ஐக்கிய தேசிய கட்சியின் தலைமையில் உருவாக்கப்பட்டுள்ள புதிய கூட்டணிக்கு ரணில் விக்ரமசிங்க தலைமை தாங்கவுள்ளார்.

ஒன்பதாவது ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவளித்த கட்சிகள் மற்றும் அமைப்புக்களை இணைத்து கூட்டணி ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.

பொதுத் தேர்தலில் சிலிண்டர் சின்னத்தில் போட்டியிட தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை ஐக்கிய மக்கள் சக்தியையும் கூட்டணியில் இணையுமாறு அழைப்பு விடுக்கப்பட்ட போதும், சஜித் பிரேமதாஸ அதனை நிராகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
25 68fde7b6a965a
செய்திகள்இலங்கை

இலங்கை மத்திய வங்கி கிரிப்டோ நாணய சேவை வழங்குநர்கள் மீது கணக்கெடுப்பு மற்றும் பதிவு கட்டாயம்

இலங்கை மத்திய வங்கி, தற்போதுள்ள கிரிப்டோ நாணய சேவை வழங்குநர்களிடமிருந்து தகவல்களைச் சேகரிப்பதற்காக ஒரு கணக்கெடுப்பை...

25 68fda926d05f6
செய்திகள்இலங்கை

வெலிகம தலைவர் லசந்த விக்ரமசேகரவின் இறுதிச் சடங்குகள் இன்று பிற்பகல்

படுகொலை செய்யப்பட்ட வெலிகம பிரதேச சபைத் தலைவர் லசந்த விக்ரமசேகரவின் இறுதிச் சடங்குகள் இன்று பிற்பகல்...

Shooting Weligama PS Lasantha Wickramasekara
செய்திகள்இலங்கை

வெலிகம பிரதேச சபை தலைவர் லசந்த விக்ரமசேகரவின் கொலைச் சம்பவம் தொடர்பில் மூவர் கைது

வெலிகம பிரதேச சபை தலைவர் லசந்த விக்ரமசேகரவின் (Lasantha Wickramasekara) கொலைச் சம்பவம் தொடர்பாக மூவர்...

25 67db8bf1cb765
செய்திகள்இலங்கை

சுங்கத்தால் தடுத்து வைக்கப்பட்ட வாகனங்களை விடுவிக்க புதிய வர்த்தமானி

சுங்கத் துறையால் தடுத்து வைக்கப்பட்டிருந்த வாகனங்களை விடுவிப்பதற்கு அனுமதி அளித்து, புதிய வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது....