24 662b419836ad6
இலங்கைசெய்திகள்

நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் அவசர சந்திப்பில் ஈடுபட்ட ரணில்

Share

நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் அவசர சந்திப்பில் ஈடுபட்ட ரணில்

ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவின் விசேட கூட்டம் நேற்று பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் நடைபெற்றது. இந்த சந்திப்பு சுமார் இரண்டு மணி நேரம் நடைபெற்றது.

இக்கலந்துரையாடலில் கருத்து தெரிவித்த இராஜாங்க அமைச்சர் சுரேன் ராகவன்,

“நாட்டின் பொருளாதார முன்னேற்றம் குறித்து கலந்துரையாடப்பட்டது. இப்போது சர்வதேச நாணய நிதியத்தின் அடுத்த காலாண்டின் பின்னர் இலங்கையுடன் இணைந்து செயற்படக்கூடிய பொருளாதாரம் இருப்பதை சர்வதேச சமூகம் ஏற்றுக்கொள்ளும். அடுத்து, நாங்கள் தேர்தலுக்கு தயாராக இருக்கிறோம் எனத் தெரிவித்துள்ளார்.

இராஜாங்க அமைச்சர் ஜானக வக்கம்புர தெரிவிக்கையில்,

“உள்ளூராட்சி சபைகளில் பணியாற்றும் 8400 ஊழியர்கள் விரைவில் நிரந்தர நியமனம் பெற்றுத் தருமாறு வலியுறுத்தப்பட்டது. அந்த ஊழியர்களுக்கு மிக விரைவில் நிரந்தர நியமனம் வழங்கி தேவையான பணிகளை செய்து தருவோம் என நம்புகிறோம்.

தேர்தல் என்ற பேச்சுக்கே இடமில்லை. ஆனால் இந்த ஆண்டு கண்டிப்பாக தேர்தல் நடத்தப்பட வேண்டும். பொதுஜன பெரமுன மற்றும் நாம் அனைவரும் இணைந்து தேர்தலில் போட்டியிடுவோம் என நம்புகிறோம்.

ஜனாதிபதி தேர்தல் வேட்பாளர் யார் என்பது அடுத்த மாதம் அறிவிக்கப்படும்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
Kerala Drugs
இலங்கை

எரித்து அழிக்கப்பட கேரள கஞ்சா.

கடந்த காலங்களில் கடல் மார்க்கமாக கொண்டு வரப்பட்ட கஞ்சா பொதிகள் வெவ்வேறு திகதிகளில் கைப்பற்றப்பட்ட நிலையில்...

question mark
இலங்கை

செல்வந்தர்களுக்கு ஏற்பட்டுள்ள திடீர் நெருக்கடி.

திடீரெனப் பணக்காரர்களாகியுள்ள சந்தேகத்திற்கிடமான நபர்கள் குறித்த தகவல்களை வழங்குமாறு பொது மக்களை காவல்துறையினர் அண்மையில் கோரியிருந்த...

Gotabaya Rajapaksa 24
இலங்கை

கோட்டாபய ராஜபக்சவுக்கு எதிராக வாக்குமூலம் வழங்கிய நெருங்கிய உறவினர்!

கொழும்பு மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவினால் கோட்டாபய ராஜபக்ச மற்றும் சுகீஸ்வர பண்டார ஆகியோருக்கு எதிராக...

dengue original 1
இலங்கை

டெங்கு மரணங்களின் எண்ணிக்கை அதிகரிப்பு – பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும் உயர்வு.

அண்மையில், தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையின் பிரகாரம், நாட்டில் பதிவான டெங்கு மரணங்களின்...