ரணிலுக்கு பிரதமர் பதவி! – நடக்காத காரியம் என்கிறது பெரமுன!

WhatsApp Image 2022 03 28 at 2.34.19 PM

” ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு பிரதமர் பதவியை வழங்குவதற்கு எமது கட்சி தயார் இல்லை.” – என்று ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி இன்று திட்டவட்டமாக அறிவித்துள்ளது.

கொழும்பில் நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அக்கட்சியின்பொதுச்செயலாளர் சாகர காரியவசம் கட்சியின் சார்பில் இந்த அறிவிப்பை விடுத்தார்.

பிரதமர் மஹிந்த ராஜபக்ச அந்தப்பதவியில் நீடிப்பார் எனவும், எல்லா விதத்திலும் தகுதியான ஒருவர் இருக்கும்போது மாற்றீடு தேவை இல்லை. அதற்கான அவசியமும் எழவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

அத்துடன், தேசிய அரசு நிறுவப்படும் என வெளியாகும் தகவலையும் மொட்டு கட்சி நிராகரித்துள்ளது.

#SriLankaNews

Exit mobile version