ஐக்கிய தேசியக் கட்சியின் ஆர்ப்பாட்டங்கள் மற்றும் அரசியல் செயற்பாடுகளை ஒழுங்கமைப்பதில் அதிகரித்து வரும் ஒமிக்ரோன் வைரஸ் தொடர்பிலும் அதிக கவனம் செலுத்துமாறு ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, கட்சியின் சிரேஷ்டர்களுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
இன்று (3) ஜூம் தொழிநுட்பத்தைப் பயன்படுத்தி கட்சியின் சிரேஷ்டர்களுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே ரணில் விக்கிரமசிங்க அறிவுறுத்தல்களை வழங்கினார்.
இதுதொடர்பில் அவர் கருத்து தெரிவிக்கையில்,
நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் ஓமிக்ரான் நோயாளிகள் அதிகமாகக் காணப்படுகின்றனர்.
இந்த சூழ்நிலையில் கட்சி அரசியல் தலைவர்கள் மற்றும் கட்சி உறுப்பினர்களின் பாதுகாப்பை உறுதி செய்வது அவசியம் என அவர் தெரிவித்தார்.
ரணில் விக்கிரமசிங்க வழங்கிய பணிப்புரையின் பிரகாரம், எதிர்கால அரசியல் செயற்பாடுகளை ஒழுங்கமைப்பதில் ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழு அங்கீகரித்த அரசியல் தத்துவத்தின் பிரகாரம் Omicrone தொடர்பில் அதிக கவனம் செலுத்தப்பட வேண்டும் என தீர்மானிக்கப்பட்டது.
#SrilankaNews
Leave a comment