ஜனாதிபதிக்கு எதிரான சாட்சியங்கள்!! பகிரங்க எச்சரிக்கை
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிராக குற்றப் பிரேரணை ஒன்றை கொண்டு வருவதற்கு தேவையான சாட்சியங்கள் தம்மிடம் காணப்படுவதாக தேசிய மக்கள் சக்தியின் முன்னாள் மாகாண சபை உறுப்பினர், சட்டத்தரணி சுனில் வட்டகல தெரிவித்துள்ளார்.
உள்ளூராட்சி மன்ற தேர்தல்களை நடத்துவதற்கு போதிய அளவு பணம் இல்லை என ஜனாதிபதி கூறிவருவதாகவும் இது ஓர் பொய்யான காரணம் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இது தொடர்பில் மேலும் கூறுகையில்,ஜனாதிபதிக்கு எதிராக குற்ற பிரேரணை ஒன்றை கொண்டுவர முடியும்.
இது தொடர்பில் திறைசேரியின் செயலாளரிடமிருந்து ஆவணம் ஒன்றை தாம் பெற்றுக்கொண்டுள்ளோம்.
கடந்த பெப்ரவரி மாதம் அளவில் நாட்டில் 6 ஆயிரம் கோடி அளவில் மேலதிக வருமானம் காணப்படுகின்றது.
உள்ளூராட்சி மன்ற தேர்தல்களை நடத்துவதற்கு ஏழு பில்லியன் ரூபாய் தேவைப்படும் என குறிப்பிடும் அவர் உள்ளூராட்சி மன்ற தேர்தலை நடத்துவதற்கு போதிய அளவு பணம் இல்லை என கூறுவது உண்மைக்கு புறம்பானது என ஜனாதிபதியை குற்றம் சுமத்தியுள்ளார்.
Leave a comment