11 1
இலங்கைசெய்திகள்

வாக்காளர்கள் மத்தியில் எச்சரிக்கையான கருத்துக்களை பகிரும் ரணில்

Share

வாக்காளர்கள் மத்தியில் எச்சரிக்கையான கருத்துக்களை பகிரும் ரணில்

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல், தனிநபர் வெற்றி தோல்விகளை விட தேசிய வெற்றியை மையமாகக் கொண்டு நாட்டின் எதிர்காலத்திற்கு முக்கியமானதாக அமையும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க (Rsnil Wickremesinghe) வலியுறுத்தியுள்ளார்.

பத்தரமுல்லையில் நடைபெற்ற கொள்கைச் சீர்திருத்தக் கலந்துரையாடலில், பொருளாதார சீர்திருத்தத் துறை கண்காணிப்புக் குழுவின் இளைஞர் பிரதிநிதிகள் மத்தியிலேயே விக்ரமசிங்க இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

எதிர்வரும் தேர்தல் தனிப்பட்ட வெற்றி அல்லது தோல்விக்கானது அல்ல, அது இலங்கை நாட்டின் வெற்றி அல்லது தோல்வியைத் தீர்மானிப்பதாகும்.

நீண்ட கால செழிப்பை உறுதி செய்வதற்காக வலுவான பொருளாதார சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்துவதன் முக்கியத்துவத்தை ஜனாதிபதி இந்தக் கலந்துரையாடலின் போது சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை அடு;த்து வரும் ஜனாதிபதி தேர்தல் ஒன்றில் தமது வெற்றியை உறுதிப்படுத்திய பின்னரே ரணில் விக்ரமசிங்க, போட்டியிடும் விருப்பத்தை வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னதாக எதிர்வரும் 15ஆம் திகதிக்குள் அவர் தமது விருப்பத்தை வெளியிட வேண்டும் என்று மகிந்த ராஜபக்ச தரப்பு கோரிக்கை விடுத்திருந்தது.

எனினும், நாமல் ராஜபக்சவின் பிந்திய கருத்துக்களின்படி அந்த காலக்கெடு ஜூலை வரையில் பிற்போடப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Share
தொடர்புடையது
images 3 7
செய்திகள்அரசியல்இலங்கை

தமிழர்களின் பூர்விகக் காணிகளை ஆக்கிரமிக்காதீர் – நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் காட்டம்!

முல்லைத்தீவு மாவட்டத்தின் கொக்கிளாய் மற்றும் கொக்குத்தொடுவாய் பகுதிகளில் தமிழ் மக்களுக்குச் சொந்தமான பூர்விகக் காணிகள் ஆக்கிரமிக்கப்படுவதற்கு...

chambikka
செய்திகள்அரசியல்இலங்கை

யூதர்களை இலக்கு வைத்து இலங்கையிலும் தாக்குதல் நடக்க வாய்ப்பு – பாட்டாலி சம்பிக ரணவக்க எச்சரிக்கை!

அவுஸ்திரேலியாவில் யூதர்களைக் குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதலைப் போன்ற சம்பவங்கள் இலங்கையிலும் இடம்பெறக்கூடும் என முன்னாள் அமைச்சர்...

25 694a8ad22f8c4
செய்திகள்இலங்கைபிராந்தியம்

லிட்ரோ நிறுவனத்திற்கு 6.6 லட்சம் புதிய காலி சிலிண்டர்கள் கொள்வனவு: அமைச்சரவை அதிரடி ஒப்புதல்!

லிட்ரோ (Litro) எரிவாயு நிறுவனத்திற்குப் புதிய காலியான எரிவாயு சிலிண்டர்களைக் கொள்வனவு செய்வதற்கான ஒப்பந்தத்திற்கு அமைச்சரவை...

1678941867 1678934490 Gun L
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ராகமவில் கைவிடப்பட்ட நிலையில் T-56 துப்பாக்கி மற்றும் தோட்டாக்கள் மீட்பு!

ராகம, பஹலவத்த பகுதியில் பாழடைந்த நிலையில் காணப்பட்ட மோட்டார் வாகனம் ஒன்றிலிருந்து T-56 ரகத் துப்பாக்கி...