தீர்க்கமான வாரத்துக்குள் நுழையும் ரணிலின் அரசாங்கம்
ரணில் விக்ரமசிங்கவின் (Ranil Wickremsinghe) அரசாங்கம் இந்த வாரத்தில் இருந்து தீர்க்கமான காலகட்டத்திற்குள் நுழைகிறது.
ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவது தொடர்பில் பொதுஜன பெரமுனவுக்கு (SLPP) உறுதியான நிலைப்பாட்டை எதிர்வரும் 15ஆம் திகதிக்குள் ஜனாதிபதி அறிவிக்க வேண்டும். அதன் பின்னரே பொதுஜன பெரமுன தமது ஆதரவை ரணிலுக்கு அறிவிக்கும்.
இந்நிலையில், இலங்கையின் கடன் நிலைமை தொடர்பில் சர்வதேச நாணய நிதியத்தின் செயற்குழு எதிர்வரும் 12ஆம் திகதி கூடி ஆராய்வதோடு இருதரப்பு கடன் வழங்குநர்கள், இலங்கையின் கடன் மறுசீரமைப்பு தொடர்பில் உடன்பாட்டை விரைவில் எட்டுவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
எனவே இன்று ஆரம்பமாகியுள்ள இந்த வாரம் ரணிலுக்கு தீர்க்கமான வாரமாகவே இருக்கும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை.