2 46
இலங்கைசெய்திகள்

பிரதமர் ஹரிணியை பகிரங்கமாக விமர்சித்துள்ள ரணில்!

Share

பிரதமர் ஹரிணியை பகிரங்கமாக விமர்சித்துள்ள ரணில்!

அமைச்சரவையில் பணியாற்றுவதற்கு அதிகாரிகளின் அங்கீகாரம் அவசியம் என பிரதமர் ஹரிணி அமரசூரிய (Harini Amarasuriya) கூறியதாக தெரிவித்த முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe), அரசியலமைப்பு குறித்து பிரதமர் கற்றுக் கொள்ள விரும்பினால் அதனை கற்றுக்கொடுக்க முடியும் என தெரிவித்துள்ளார்.

 

குருணாகலை – பன்னல பிரதேசத்தில் வைத்து இன்று (29) முன்னாள் ஜனாதிபதி மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

 

அத்தோடு, அரச சேவையில் நிலவும் சம்பள முரண்பாடுகளை நீக்குவதற்காக தாம் நியமித்த உதய ஆர்.செனவிரத்ன நிபுணர் குழுவில் தற்போதைய ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவின் (Anura Kumara Dissanayake) பொருளாதார ஆலோசகர் துமிந்த ஹுலங்கமுவவும் அங்கம் வகித்ததாக ரணில் குறிப்பிட்டுள்ளார்.

 

இதேவேளை, அரச ஊழியர்களின் சம்பள முரண்பாடுகள் நீக்கப்பட்டு, அனைத்து அதிகாரிகளுடனும் கலந்தாலோசித்து, அமைச்சரவையின் அங்கீகாரம், அமைச்சரவை தீர்மானம் மற்றும் அமைச்சரவைப் பத்திரம் என்பனவற்றைப் பெற்று முறையான முறையில் உரிய சம்பளம் அதிகரிக்கப்பட்டதாகவும் முன்னாள் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.

 

Share
தொடர்புடையது
New Project 47 1024x576 1
செய்திகள்இலங்கைபிராந்தியம்

காசாளர்களைக் குறிவைக்கும் நூதன மோசடி: நாடு முழுவதும் கைவரிசை காட்டிய ரத்மலானை நபர் கொட்டாவையில் சிக்கினார்!

நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள வர்த்தக நிலையங்களுக்குச் சென்று, காசாளர்களை (Cashiers) மிகவும் சூட்சுமமான முறையில்...

26 696674a2371e4
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பணிப்பெண்ணை நிர்வாணமாக்கி காணொளி வெளியிட்ட வர்த்தகர் கைது: ஹிக்கடுவையில் பதுங்கியிருந்தபோது சிக்கினார்!

சமூக வலைத்தளங்களில் பரவிய பெண்ணொருவரைத் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கும் கொடூரமான காணொளிச் சம்பவம் தொடர்பாக, பிரதான சந்தேக...

earthquake 083711893 16x9 0
செய்திகள்இந்தியா

டெல்லியில் லேசான நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 2.8 ஆகப் பதிவு!

இந்தியத் தலைநகர் டெல்லி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இன்று (19) காலை லேசான நிலநடுக்கம்...

images 1 5
செய்திகள்அரசியல்இலங்கை

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை விட ஆபத்தானது: புதிய சட்டமூலம் குறித்து மனித உரிமைகள் கண்காணிப்பகம் எச்சரிக்கை!

இலங்கையில் புதிதாக முன்மொழியப்பட்டுள்ள பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் அல்லது உத்தேச “அரசை பயங்கரவாதத்திலிருந்து பாதுகாக்கும் சட்டம்”...