rtjy 47 scaled
அரசியல்இலங்கைசெய்திகள்

ராஜபக்சக்களை பாதுகாக்க மாட்டேன்: ரணில் பதிலடி

Share

ராஜபக்சக்களை பாதுகாக்க மாட்டேன்: ரணில் பதிலடி

“விடுதலைப் புலிகளை மீளுருவாக்கம் செய்யும் நோக்கம் எனக்கு இல்லை. அதேவேளை, ராஜபக்சக்களை பாதுகாக்க வேண்டிய தேவையும் எனக்கு இல்லை.” என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

மாவீரர் தின நிகழ்வு தொடர்பிலும், நாட்டின் பொருளாதார நெருக்கடி குறித்து ராஜபக்ச தரப்புக்கு எதிராக உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு தொடர்பிலும் ஜனாதிபதிக்கு எதிராக எதிரணியினர் முன்வைத்து வரும் விமர்சனங்களுக்கு பதிலளிக்கும் வகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், “போரில் மரணித்த தமது சொந்தங்களைத் தமிழர்கள் நினைவேந்தும் போது அதற்கு புலி முத்திரை குத்த முடியாது.

அதேவேளை, நினைவேந்தல் என்ற பெயரில் நீதிமன்றக் கட்டளைகளை மீறி புலிகளை கொண்டாடுபவர்களை கைது செய்யாமல் விடவும் முடியாது. இதற்குள் அரசியல் ஆதாயம் தேடவும் சிலர் முற்படுகின்றார்கள்.

புலிகளை மீளுருவாக்கம் செய்யும் நோக்கம் எனக்கு இல்லை. சிலரின் சிறுபிள்ளைத்தனமான கருத்துக்களுக்கு என்னால் அவர்களின் பாணியில் பதிலளிக்க முடியாது என கூறியுள்ளார்.

Share
தொடர்புடையது
Untitled 9
செய்திகள்இலங்கை

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் கதிர்காமம் சென்ற பேருந்து தீப்பற்றி எரிந்து நாசம்!

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் வெலிப்பன்ன (Welipanna) நுழைவாயிலுக்கு அருகாமையில் கதிர்காமம் நோக்கிப் பயணித்த சொகுசுப் பேருந்து...

Untitled 8
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையில் கடும் வெப்பம் மே மாதம் வரை நீடிக்கும்: வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!

இலங்கையில் தற்போது நிலவி வரும் கடும் வெப்பமான காலநிலை எதிர்வரும் மே மாதம் வரை நீடிக்கும்...

Untitled 7
செய்திகள்இலங்கைபிராந்தியம்

குமண தேசிய பூங்காவில் சிறுத்தை தாக்குதல்: செக் குடியரசு நாட்டுத் துறவி உயிரிழப்பு!

இலங்கையின் அம்பாறை மாவட்டத்திலுள்ள குமண தேசிய பூங்காவிற்குட்பட்ட பம்பர கஸ்தலாவ ஆரண்ய சேனாசனத்தில் (Bambara Kasthalawa...

Untitled 6
செய்திகள்உலகம்

வட்ஸ்அப்பில் அதிரடி மாற்றங்கள்: ஐபோன் பயனர்களுக்கும் இரட்டை கணக்கு வசதி அறிமுகம்!

பயனர்களின் அன்றாடத் தகவல் பரிமாற்றத்தை மேலும் எளிமையாகவும், நேர்த்தியாகவும் மாற்றும் நோக்கில் வட்ஸ்அப் (WhatsApp) நிறுவனம்...