ஜனாதிபதி தேர்தலில் இருந்து விலகும் தீர்மானதில் ரணில்! அரசியல்வாதி கசியவிட்ட தகவல்
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, தாம் தோற்கடிக்கப்படுவோம் என தெரிந்தே போட்டியில் இறங்குபவர் அல்ல என ஐக்கிய தேசிய கட்சியின் முன்னாள் செயலாளரும், ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் தற்போதைய தேசிய அமைப்பாளருமான திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.
இணைய செய்தி சேவை ஒன்றுக்கு வழங்கிய உரையாடலில் அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
ரணில் விக்ரமசிங்க தற்சமயம் உறுதியான தோல்வியை எதிர்நோக்கியுள்ளார்.
அனைவருக்கும் முன்பாகவே, கட்டு பணத்தை வைப்பு செய்துள்ள போதிலும் ஜனாதிபதி தேர்தலில், அவர் போட்டியிடுவது சந்தேகமே என அத்தநாயக்க குறிப்பிட்டுள்ளார்.
எனவே, வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளும் கடைசி நாள் வரை இது தொடர்பில் நிச்சயமற்ற நிலை நிலவும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதுவரையில் ரணில் விக்ரமசிங்க, தாம் தோற்றுப்போவதாக நினைத்து ஜனாதிபதி தேர்தலுக்கு வேறு சிலரையே முன்மொழிந்து வந்தார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனவே, ரணில் விக்ரமசிங்க கட்டுப்பணம் செலுத்திய போதிலும், கடைசி நேரத்தில் கூட அவர் போட்டியிடப் போவதில்லை என்ற எண்ணம்,தனக்கு தனிப்பட்ட முறையில் இருப்பதாக திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.
Comments are closed.