பழைய நண்பரை நேரில் சென்று பார்வையிட்ட ஜனாதிபதி
முன்னாள் அமைச்சரும் ஐக்கிய தேசியக்கட்சியின் முக்கியஸ்தருமான காமினி ஜயவிக்ரம பெரேராவின் இல்லத்திற்கு சென்று ஜனாதிபதி நலம் விசாரித்துள்ளார்.
காமினி ஜயவிக்ரம பெரேராவின் குருநாகல், கட்டுகம்பல இல்லத்திற்கு சென்றே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று (11) நேரில் சென்று சுகம் விசாரித்துள்ளார்.
இதன்போது ஜயவிக்ரம மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களுடன் சிநேகபூர்வமாக உரையாடிய ஜனாதிபதி, வீட்டிற்கு அருகில் கூடியிருந்த பிரதேச மக்களுடனும் உரையாடியுள்ளார்.
இந்நிகழ்வில் முன்னாள் அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம், காமினி ஜயவிக்ரம பெரேராவின் புதல்வர்கள், வடமேல் மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் அசங்க ஜயவிக்ரம, பதில் பொலிஸ் மா அதிபர் தேஸ்பந்து தென்னகோன் உள்ளிட்டோர் கலந்துகொண்டுள்ளனர்.
Comments are closed.