24 662a116c432fc
இலங்கைசெய்திகள்

அரசியல் கூட்டணியின் புதிய நகர்வு: ஜனாதிபதித் தேர்தலை இலக்கு வைக்கும் ரணில்

Share

அரசியல் கூட்டணியின் புதிய நகர்வு: ஜனாதிபதித் தேர்தலை இலக்கு வைக்கும் ரணில்

பரந்த அரசியல் கூட்டணியை உருவாக்குவதற்கான அதன் முதல் நடவடிக்கையாக, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க(Ranil Wickremesinghe), ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முக்கியஸ்தர் பசில் ராஜபக்ச மற்றும் ஏனைய கட்சிகள் மற்றும் குழுக்களின் பிரதிநிதிகளை, அண்மையில் சந்தித்துள்ளார்.

ஜனாதிபதித் தேர்தலைக் கருத்தில் கொண்டு, அரசியல் பணிகளை எதிர்வரும் மே தினத்துக்கு பின்னர்,, தீவிரப்படுத்தும் வகையில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

கூட்டத்தில் மக்கள் ஐக்கிய முன்னணியை பிரதிநிதித்துவப்படுத்தி பிரதமர் தினேஷ் குணவர்தன கலந்துகொண்டார்.

மேலும், அமைச்சர்களான பிரசன்ன ரணதுங்க, திரான் அலஸ், ஹரின் பெர்னாண்டோ, காஞ்சன விஜேசேகர, நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்தானந்த அளுத்கமகே மற்றும் அனுர பிரியதர்ஷன யாப்பா ஆகியோரும் இதில் பங்கேற்றுள்ளதாக கூறப்படுகிறது.

ஐக்கிய தேசியக் கட்சியை (UNP) பிரதிநிதித்துவப்படுத்தி ஜனாதிபதியின் பணிமனையின் பிரதானி சாகல ரத்நாயக்கவும் கலந்து கொண்டுள்ளார்.

இதன்படி ஜனாதிபதியின் தலைமையிலான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவும் ஐக்கிய தேசியக் கட்சியும் தனித்தனியாக மே தினப் பேரணிகளை நடத்துவதற்கும் அதன் பின்னர் ஜனாதிபதித் தேர்தலைக் கருத்திற்கொண்டு ஒத்த கருத்துடைய கட்சிகளுடன் கூட்டணிக்கு இணைவதற்கும் இதன்போது தீர்மானிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி இம்முறை பொது வேட்பாளராக, உத்தேச கூட்டணி சின்னத்தில் தேர்தலில் போட்டியிடுவார். இந்தநிலையில், அனைத்து கட்சிகளும் குழுக்களும் ஏற்றுக்கொள்ளக்கூடிய சின்னத்தில் புதிய கூட்டணியை பதிவு செய்வதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்வதற்காக ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் வஜிர அபேவர்தன மற்றும் அமைச்சர் டிரான் அலஸ் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அத்துடன் ஜூன் மாதம் சர்வதேச நாணய நிதியத்தின் மூன்றாவது தவணையை நாடு பெற்ற பிறகு, தேர்தலை இலக்காகக் கொண்டு ஜனாதிபதி பிரசாரத்தை தொடங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையில் புதிய கூட்டணியை உருவாக்குவதற்கு நாடாளுமன்ற உறுப்பினர்களான விமல் வீரவன்ச, டலஸ் அழகப்பெரும மற்றும் பிவித்துரு ஹெல உறுமய தலைமையிலான அரசியல் குழுக்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

Share
தொடர்புடையது
world 42
செய்திகள்இலங்கைபிராந்தியம்

உள்ளூர் தொழில்களை வலுப்படுத்துவதே அரசாங்கத்தின் இலக்கு:  ஜனாதிபதி அநுரகுமார உறுதி!

உள்நாட்டுத் தொழில்களைப் பாதுகாப்பதும், அவற்றை வலுப்படுத்துவதுமே தற்போதைய அரசாங்கத்தின் முதன்மையான நோக்கமாகும் என ஜனாதிபதி அநுரகுமார...

world 41
செய்திகள்இலங்கை

இந்தியா – இலங்கை கடல்சார் உறவில் புதிய மைல்கல்: கொழும்பு கப்பல் கட்டும் தளத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்!

இந்தியா மற்றும் இலங்கை இடையிலான பொருளாதார மற்றும் வர்த்தக உறவுகளை மேலும் வலுப்படுத்தும் நோக்கில், கொழும்பு...

world 40
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையின் பல மாகாணங்களுக்கு நாளை வெப்ப எச்சரிக்கை: பொதுமக்கள் அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தல்!

நாட்டின் ஒன்பது மாகாணங்களில் ஏழு மாகாணங்கள் மற்றும் மொனராகலை மாவட்டத்திற்கு நாளை (ஏப்ரல் 09, 2026)...

world 39
செய்திகள்உலகம்

ஈரானுக்கு ஆயுதங்கள் வழங்கினால் 50% அபராத வரி: உலக நாடுகளுக்கு டொனால்ட் டிரம்ப் கடும் எச்சரிக்கை!

மத்திய கிழக்கில் போர்நிறுத்த உடன்படிக்கை எட்டப்பட்டுள்ள சூழலில், ஈரானுக்கு இராணுவ ஆயுதங்களை வழங்கும் எந்தவொரு நாட்டிற்கும்...