ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும், ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பஸில் ராஜபக்சவுக்கும் இடையிலான முக்கிய சந்திப்பொன்று இடம்பெறவுள்ளது.
ஜனாதிபதி செயலகத்தில் இன்று மாலை மேற்படி சந்திப்பு இடம்பெறும் என்று மொட்டு கட்சியின் எம்.பியொருவர் தெரிவித்தார்.
சர்வக்கட்சி அரசு, அதில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் வகிபாகம் , ஆளுநர்கள் நியமனம் உட்பட மேலும் சில விடயங்கள் தொடர்பில் இச்சந்திப்பின்போது கலந்துரையாடப்படவுள்ளது.
#SriLankaNews