24 66286ff733b68
அரசியல்இலங்கைசெய்திகள்

ரணிலுடன் மந்திராலோசனை நடத்திய பசில்

Share

ரணிலுடன் மந்திராலோசனை நடத்திய பசில்

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகர் பசில் ராஜபக்ஷவிற்கும் இடையிலான மற்றுமொரு சுற்று பேச்சுவார்த்தை நேற்று பிற்பகல் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இடம்பெற்றது.

இதில் பிரதமர் தினேஷ் குணவர்தன, அமைச்சர்களான நிமல் சிறிபால டி சில்வா, ஹரின் பெர்னாண்டோ, பிரசன்ன ரணதுங்க, திரன் அலஸ், காஞ்சன விஜேசேகர ஆகியோரும் கலந்து கொண்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

எதிர்வரும் தேர்தல்கள் தொடர்பில் விரைவில் தீர்மானம் எடுக்கப்பட வேண்டுமென பசில் ராஜபக்ஷ சுட்டிக்காட்டியுள்ளதோடு, மே தினத்திற்கு பின்னர் ஜனாதிபதி தேர்தல் பிரசாரங்களை விரைவில் ஆரம்பிக்க வேண்டும் எனவும் அமைச்சர் டிரான் அலஸ் குறிப்பிட்டுள்ளார்.

ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டால், அதற்கு ஆதரவைப் பெற்றுக் கொள்ள அனைத்துத் தரப்பினரிடமும் எழுத்துபூர்வமாக கோரிக்கை விடுப்பதே சிறந்தது என பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

விமல் வீரவன்சவின் கட்சி, உதய கம்மன்பிலவின் கட்சி, டலஸ் அழகப்பெரும குழுவினர் உள்ளிட்ட கட்சிகளை மீளக் கொண்டு வருவதற்கும் ஆதரவை பெறுவதற்கு பிரதமரின் தலையீடு அவசியம் எனவும் பசில் ராஜபக்ஷ மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

எவ்வாறாயினும், இறுதியில், அரசாங்கத்தின் பெரும்பாலான பணிகளை மேற்கொள்ள விரும்புவதால், ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்புமனுவை ஜூன் மாத இறுதியில் அறிவிக்கவுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஐந்தாவது தடவையாகவும் எந்தவித இணக்கப்பாடும் இல்லாமல் கலந்துரையாடல் நிறைவடைந்தமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
dengue original 1
இலங்கை

டெங்கு மரணங்களின் எண்ணிக்கை அதிகரிப்பு – பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும் உயர்வு.

அண்மையில், தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையின் பிரகாரம், நாட்டில் பதிவான டெங்கு மரணங்களின்...

Shooting 3
இலங்கை

இன்றைய தினம் நாட்டில் மற்றுமொரு துப்பாக்கிச்சூடு.

இன்று மாலை, கொழும்பு – தெமட்டகொடை, குப்பியாவத்தை மயானத்திற்கு அருகில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில்...

Shooting 2
இலங்கை

காவல்துறை உத்தியோகத்தரின் மீது துப்பாக்கி பிரயோகம்.

பெலியத்த, வலவல பகுதியில், திக்வெல்ல காவல் நிலையத்தில் கடமைற்றும் காவல்துறை உத்தியோகத்தர் ஒருவரின் வீட்டின் மீது...

dead body 1
இலங்கை

நீரில் மூழ்கிய சிறுவன் சடலமாக மீட்பு.

நேற்று மாலை, கம்பளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வெலிகல்ல – உடோவிட்ட பகுதியில், நான்கு சிறுவர்கள் இணைந்து...