பிரதமராக பதவியேற்றார் ரணில்!

ranil 1

ஜக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, பிரதம அமைச்சராக இன்று மாலை நியமிக்கப்பட்டார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச முன்னிலையில் அவர் பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.

1977 ஆம் ஆண்டில் நாடாளுமன்ற அரசியல் பயணத்தை ஆரம்பித்த ரணில் விக்கிரமசிங்க, இதற்கு முன்னர் ஐந்து தடவைகள் பிரதமராக செயற்பட்டுள்ளார். இன்று 6 ஆவது முறை பிரதமராக பதவியேற்றுள்ளார்.

புதிய அமைச்சரவை நாளை நியமிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

#SruLankaNews

Exit mobile version