” ரணிலும், சஜித்தும் ஒரே மாதிரியானவர்கள்தான். இருவராலுமே தேர்தல்களில் வெற்றிபெறமுடியாது. எனவே, சஜித்தையும் பாதுகாக்க வேண்டும்.” – என்று அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
” தடுப்பூசி திட்டம் தொடர்பில் சஜித் போலியான பிரச்சாரத்தை முன்னெடுத்து, மக்களை தவறாக வழிநடத்தினார். ஆனால் திருட்டுதனமாக அவர் தடுப்பூசியை ஏற்றிக்கொண்டார். அநுரகுமார திஸாநாயக்கவும் அப்படிதான்.
சஜித்துக்கு பைசர் தடுப்பூசி ஏற்றப்பட்டது. ஏனெனில் அவரை நாம் பாதுகாக்க வேண்டும். அப்போது அரசுக்கு நன்மை பயக்கும். ஏனெனில் ரணில்போல், சஜித்தும் தேர்தல்களில் தோற்கக்கூடிய தலைவர்.
அடுத்து எந்த தேர்தல் நடத்தப்பட்டாலும் அதில் அரசு நிச்சயம் வெற்றிபெறும். இதில் மாற்று கருத்துக்கு இடமில்லை.” – என்றார்.
#SriLankaNews