நாட்டில் தற்போது நிலவும் சீரற்ற காலநிலையால் இருவர் பலியாகியுள்ளனர். வெள்ளத்தில் மூழ்கியே இவர்கள் பலியாகியுள்ளனர்.
கொழும்பு மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களில் 269 குடும்பங்களைச் சேர்ந்த 1, 309 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் இன்று காலை விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, மழையுடன்கூடிய காலநிலை புத்தாண்டுவரை நீடிக்கும் என வளிமண்டளவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
#SriLankaNews