24 66737f1f15be2
இலங்கைசெய்திகள்

நேருக்கு நேர் மோதி கோர விபத்தில் சிக்கிய பேருந்துகள்

Share

நேருக்கு நேர் மோதி கோர விபத்தில் சிக்கிய பேருந்துகள்

கடுவெல – ரனால பிரதேசத்தில் தனியார் பேருந்தும், மாணவர் பேருந்தொன்றும் நேருக்கு நேர் மோதி விபத்திற்குள்ளானமைக்கு இரண்டு பேருந்துகளையும் கவனக்குறைவாக செலுத்தியமையே காரணம் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கடுவெல – ரனால பிரதேசத்தில் தனியார் பேருந்தும், மாணவர் பேருந்தொன்றும் நேற்று (19.06.2024) நேருக்கு நேர் மோதி இடம்பெற்ற விபத்தில் 50 பேர் காயமடைந்திருந்தனர்.

கொழும்பில் இருந்து லபுகமுவ நோக்கி மாணவர்களை ஏற்றிச் சென்ற மாணவர் பேருந்தும் எம்பிலிப்பிட்டியவில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த தனியார் பேருந்தும் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டிருந்தது.

இந்த விபத்தில் காயமடைந்த பாடசாலை மாணவர்கள் உட்பட 50 பேர் நவகமுவ மற்றும் அவிசாவளை வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக ஹன்வெல்ல பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும், நவகமுவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர்களில் 5 பேர் மாலை கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டதாக நவகமுவ வைத்தியசாலையின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

குறித்த விபத்து இடம்பெற்றபோது அப்பகுதியில் மழை பெய்து கொண்டிருந்ததாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

மேலும், விபத்தில் இரண்டு பேருந்துகளின் முன்பகுதி பலத்த சேதமடைந்துள்ளதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்.

ஹங்வெல்ல பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் பிரதீப் குமாரவின் பணிப்புரையின் பேரில் பொலிஸ் சார்ஜன்ட் ஏக்கநாயக்க (54580) உள்ளிட்ட அதிகாரிகள் குழு மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Share
தொடர்புடையது
liver
இலங்கை

இளம் தலைமுறையினர் மத்தியில் அதிகரித்து வரும் நோய்த்தாக்கம்.

இரைப்பை குடல் மற்றும் கல்லீரல் வைத்திய நிபுணர் சுபுன் குலதுங்க, இளைஞர்கள் மத்தியில் குடல் சார்ந்த...

நாடாளுமன்ற உறுப்பினர்களின் வேதனம்
இலங்கை

நாடாளுமன்ற உறுப்பினர்களின் வேதனம் உயர்த்தப்பட்டுள்ளதா?

அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ, இன்று நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில்...

Wei Huaxiang
இலங்கை

புதிய சீனத்தூதுவர் இலங்கைக்கு விஜயம்.

இலங்கைக்கான புதிய சீனத் தூதுவராக நியமிக்கப்பட்டுள்ள வெய் ஹுவாசியாங் (Wei Huaxiang) தமது பதவியைப் பொறுப்பேற்பதற்காக...

வாடிகளுக்குள் புகுந்த கடல்நீர்
இலங்கை

முல்லைத்தீவில் திடீரென வாடிகளுக்குள் புகுந்த கடல்நீர்!

இன்று காலை, திடீரென அதிகரித்த கடற்சீற்றம், முல்லைத்தீவு மாவட்டத்தில் காரணமாக கடல்நீர் கரையைத் தாண்டி மீனவர்களின்...