ரம்புக்கனை சம்பவத்துடன் தொடர்புடைய சகல பொலிஸாரையும் கைதுசெய்க! – நீதிமன்றம் உத்தரவு

ரம்புக்கனை 1 1 e1651052871123

ரம்புக்கனை போராட்டத்தின்போது துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்ட மற்றும் அதற்கு உத்தரவு வழங்கிய சகல பொலிஸாரையும் கைதுசெய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கேகாலை நீதிவான் நீதிமன்றத்தால் இந்த உத்தரவு இன்று பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவத்தில் கொல்லப்பட்ட மற்றும் காயமடைந்தவர்களின் சட்டவைத்திய பரிசோதனைகளில் அவர்களது காயங்கள் துப்பாக்கிச்சூட்டால் ஏற்பட்டது என உறுதிசெய்யப்பட்டது.

இந்தநிலையில் சம்பவத்துடன் தொடர்புடைய பொலிஸ் அதிகாரிகளை உடனடியாகக் கைதுசெய்துமாறு பொலிஸ்மா அதிபருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

#SriLankaNews

 

Exit mobile version