ரம்புக்கனை சம்பவம்: சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருக்கு விளக்கமறியல்!

photo 8 e1651239515980

ரம்புக்கனை சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட கேகாலைக்குப் பொறுப்பான முன்னாள் பொலிஸ் சிரேஷ்ட அத்தியட்சகர் கே.பி. கீர்த்திரத்ன எதிர்வரும் 6ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

ரம்புக்கனை துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பில் கேகாலைக்குப் பொறுப்பான முன்னாள் பொலிஸ் சிரேஷ்ட அத்தியட்சகர் கே.பி. கீர்த்திரத்ன மற்றும் மூன்று பொலிஸ் கான்ஸ்டபிள்கள் நேற்றிரவு குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டனர்.

ஆர்ப்பாட்டத்தின்போது ரம்புக்கனையில் நபர் ஒருவரைச் சுட்டுக் கொல்ல உத்தரவிட்ட அனைத்து அதிகாரிகளையும் கைதுசெய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு கேகாலை நீதிவான் பொலிஸ்மா அதிபருக்கு நேற்றுமுன்தினம் உத்தரவிட்டார். அந்த உத்தரவின் பிரகாரம் இவர்கள் கைதுசெய்யப்பட்டனர்.

இதற்கிடையில், ரம்புக்கனை சம்பவத்தில் கைதுசெய்யப்பட்ட நான்கு பொலிஸ் உத்தியோகத்தர்கள் தொடர்பான மருத்துவ அறிக்கைகளைச் சமர்ப்பிக்குமாறு கொழும்பு மற்றும் கண்டி சட்ட வைத்திய அதிகாரிகளுக்கு கேகாலை நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

#SriLankaNews

Exit mobile version