சாந்தனின் கடைசி விருப்பம்: நிறைவேற்ற முடியவில்லை
சாந்தனின் கடைசி விருப்பம் இறுதியாக ஒரு தடவை தனது தாயை பார்த்து அவர் கையால் ஒருவாய் சோறு சாப்பிட வேண்டும் என்பதே என நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
எனினும் அதை கூட நிறைவேற்றி வைக்க முடியவில்லை என அவர் ஆதங்கம் வெளியிட்டுள்ளார்.
உடல்நலக் குறைவால் காலமான சாந்தனின் உடலுக்கு சீமான் அஞ்சலி செலுத்தியுள்ளார்.
இதனை தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந் விடயத்தை கூறியுள்ளார்.
மேலும் கூறுகையில், நான்கு மாத கால அவருடைய தவிப்பு தனது தாயை பார்த்து விட வேண்டும் என்பதே. நியாயமாக இதை பார்க்கும் போது இது ஒரு கொலை.
சட்டக்கொலை. உடலில் இருந்து உயிர் பிரியும் விடுதலையை நாம் கேட்கவில்லை என குறிப்பிட்டுள்ளார்.