பல எதிர்பார்ப்புகளுடன் பிறந்திருக்கும் இந்த புதிய ஆண்டின் ஆரம்பத்திலேயே குடும்ப ஆட்சியில் தத்தளித்து கொண்டிருக்கும் இந்த ராஜபக்ச அரசை விரட்டியடிக்கவேண்டும்.
இதற்காக அனைத்து மக்களும் அணிதிரள வேண்டும் என நட்டு மக்களுக்கு எதிர்க்கட்சித் தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருமான சஜித் பிரேமதாஸ அழைப்பு விடுத்துள்ளார்.
ஊடகங்களிடம் கருத்து தெரிவித்த அவர் மேலும் தெரிவிக்கையில்,
ராஜபக்ச அரசின் சர்வாதிகார ஆட்சியால் மக்கள் வறுமையின் கோரத்தாண்டவத்தின் பிடியில் சிக்கித்தவிர்க்கின்றனர். எண்ணிலடங்காத சொல்லெணாத்துன்பங்களையும் வேதனைகளையும் தாங்கிக்கொண்டு புதிய வருடத்தில் கால் எடுத்து வைத்துள்ளனர்.
இந்த அரசு தொடர்ந்து ஆட்சியில் நீடித்தால் நாட்டு மக்கள் தினந்தோறும் பட்டினி சாவை எதிர்கொள்ள வேண்டி வரும். இந்த கொடுங்கோல் அரசை வருட ஆரம்பத்திலேயே வீட்டுக்கு விரட்டியடிக்க வேண்டும்.
எனவே இந்த கொடுங்கோல் அரசை குடும்பத்துடன் வீட்டுக்கு அனுப்ப அனைவரும் அணிதிரள வேண்டும் – என்றார்.
#Srilankanews
Leave a comment