tamilni 6 scaled
அரசியல்இலங்கைசெய்திகள்

மகிந்த தரப்பில் இருந்து களமிறங்கும் ஜனாதிபதி வேட்டபாளர்

Share

மகிந்த தரப்பில் இருந்து களமிறங்கும் ஜனாதிபதி வேட்டபாளர்

நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினர் ஒருவரையே வேட்பாளராக களமிறக்கவுள்ளதுடன், பொது வேட்பாளர் என்ற பேச்சுக்கே இடமில்லையென, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்த்தன தெரிவித்தார்.

பயாகலை பிரதேசத்தில் நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே, அவர் மேற்கண்டவாறு கூறினார்.

மேலும் அவர் குறிப்பிடுகையில்,

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பதவி விலகியதைத் தொடர்ந்து ஏற்பட்ட வெற்றிடத்துக்காகவே நாடாளுமன்றத்தினூடாக இடைக்கால ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்கவை தெரிவு செய்தோம்.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் அரசாங்கத்தை தோற்றுவித்துள்ளதால், எமது கட்சியின் கொள்கைகளை விட்டுக்கொடுக்க முடியாது.

எதிர்வரும் 2024ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் ஒன்றிணைந்து செயற்படுவது தொடர்பாக இதுவரையில் எந்தவிதத் தீர்மானங்களும் எடுக்கப்படவில்லை.

பொதுஜன பெரமுனவின் உறுப்பினரையே ஜனாதிபதி வேட்பாளராகக் களமிறக்குவோம். அடுத்த ஜனாதிபதி தேர்தலில் பொதுஜன பெரமுன பொது வேட்பாளர் ஒருவரை களமிறக்கவுள்ளதாக குறிப்பிடப்படும் செய்தி அடிப்படையற்றது.

வாடகைக்கு வேட்பாளரை பெற வேண்டிய தேவை எமக்குக் கிடையாது. எமது கொள்கைகளை முன்னிலைப்படுத்தும் வேட்பாளரை களமிறக்குவோம்.

எதிர்வரும் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள கட்சியின் வருடாந்த மாநாட்டில் முக்கிய அரசியல் தீர்மானங்களை அறிவிப்போம். கட்சியை பலப்படுத்தும் வகையில் பல தீர்மானங்களை தற்போது முன்னெடுத்துள்ளோம்.

மக்கள் மத்தியில் ராஜபக்சவினருக்குள்ள செல்வாக்கை ஒருபோதும் இல்லாதொழிக்க முடியாது. ராஜபக்சவினரை எந்தச் சக்தியாலும் வீழ்த்தவே முடியாது எனத் தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
25 692bfb29122ad
இலங்கைசெய்திகள்

கண்டி மாவட்டத்தில் சூறாவளிப் பாதிப்பு: 240 உயிரிழப்புகள், 75 பேர் மாயம் – 1.89 இலட்சம் பேர் பாதிப்பு! 🌪️

திட்வா சூறாவளி காரணமாக நாடு முழுவதும் பெய்த கனமழையால் அதிக சேதத்தை சந்தித்த கண்டி மாவட்டத்தில்...

25 679df8be8f807
அரசியல்இலங்கைசெய்திகள்

நிர்மலா சீதாராமனுடன் இ.தொ.கா. தலைவர் செந்தில் தொண்டமான் சந்திப்பு: பெருந்தோட்ட சமூக நலன் குறித்து பேச்சு!

இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கும் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் (இ.தொ.கா.) தலைவர் செந்தில் தொண்டமானுக்கு இடையில்...

articles2F5erOvsc6djiIYVO8MiFX 1
இலங்கைசெய்திகள்

சூறாவளியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ ஐ.நா.வின் 35.3 மில்லியன் டொலர் நிதி கோரிக்கை!

‘டிட்வா’ சூறாவளியினால் பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு உயிர்காக்கும் உதவிகளை வழங்க 35.3 மில்லியன் அமெரிக்க டொலர் (இலங்கை...

MediaFile 13
இலங்கைசெய்திகள்

அடுத்த 36 மணித்தியாலங்களுக்கு வடக்கு, வட மத்திய, புத்தளம் மற்றும் திருகோணமலைக்கு மழை வாய்ப்பு! 

அடுத்த 36 மணித்தியாலங்களுக்கான வானிலை முன்னறிவிப்பை வளிமண்டலவியல் திணைக்களம் இன்று (டிசம்பர் 11) வெளியிட்டுள்ளது. அதன்படி,...