இலங்கைசெய்திகள்

கோட்டபாய தொடர்பில் நாமலுக்கு சந்தேகம்

Share
கோட்டபாய தொடர்பில் நாமலுக்கு சந்தேகம்
கோட்டபாய தொடர்பில் நாமலுக்கு சந்தேகம்
Share

கோட்டபாய தொடர்பில் நாமலுக்கு சந்தேகம்

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் சேதன பசளைத் திட்டத்திற்கு ஆலோசனை வழங்கியவர்கள் தொடர்பில் சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

காலி முகத்திடல் போராட்டத்தை முன்னெடுத்த மூன்றாம் தரப்பினரால் இந்த ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதா என்ற சந்தேகம் எழுந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஹிரியால தொகுதிக் குழுக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

கோட்டாபய ராஜபக்ஷவின் ஆட்சி காலத்தில் மேற்கொள்ளப்பட்ட உரத் திட்டமே தோல்விகளுக்கு முக்கிய காரணமாகியுள்ளது. இதனை சிலர் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டுள்ளனர்.

போராட்டத்தை வழிநடத்திய மூன்றாம் தரப்பினர் தொடர்பில் எனக்கு சந்தேகம் உள்ளது.

விவசாய குடும்ப பின்னணியை கொண்ட தலைவரான டி.ஏ.ராஜபக்ஷவின் மகன் உரத்திற்கான நிவாரணத்தை ஒரு போது நிறுத்தியிருக்க மாட்டார் என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ மேலும் தெரிவித்துள்ளார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Related Articles
உலகம்ஏனையவைசெய்திகள்

இந்தியா – பாகிஸ்தான் : 2025 சக்தி வாய்ந்த இராணுவத்தை கொண்ட நாடு இதுதான்..!

ஜம்மு காஷ்மீர் பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து, இந்தியாவிற்கு பாகிஸ்தானுக்கும் இடையிலான விரிசில் பாரிய போராக மாறும்...

8 7
இலங்கைசெய்திகள்

கட்டுநாயக்க பகுதியில் மீண்டும் துப்பாக்கிச் சூடு

கட்டுநாயக்க பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஒருவர் காயமடைந்துள்ளார். இன்று காலை 10 மணியளவில்...

4 7
இலங்கைசெய்திகள்

தேர்தல் பணிக்காக சென்ற இளம் பெண் அரசாங்க அதிகாரி உயிரிழப்பு

கண்டி, பேராதனை பொலிஸ் பிரிவில் உள்ள கன்னொருவ ஆரம்ப பாடசாலையில் தேர்தல் பணிக்காகச் சென்ற அரசாங்க...

5 7
இலங்கைசெய்திகள்

சப்ரகமுவ பல்லைக்கழகத்தில் 11 மாணவர்களுக்கு வகுப்புத் தடை

சப்ரகமுவ பல்கலைக்கழகத்தில் பகிடிவதைச் சம்பவத்தின் எதிரொலியாக பதினொரு மாணவர்களுக்கு வகுப்புத்தடை விதிக்கப்பட்டுள்ளது. சப்ரகமுவ பல்கலைக்கழகத்தின் தொழிநுட்ப...