ஹிருணிகா
அரசியல்இலங்கைசெய்திகள்

ராஜபக்ச குடும்ப அரசு நாட்டுக்கே சாபக்கேடு! – போட்டுத் தாக்குகின்றார் ஹிருணிகா

Share

“குடும்ப ஆட்சி நடத்தும் ராஜபக்சக்கள், நாட்டுக்கு ஒரு சாபம் ஆகும். – இவ்வாறு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர தெரிவித்தார்.

இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“தற்போதைய அரசு எவரின் ஆலோசனையையும் செவிமடுப்பதில்லை; தன்னிச்சையாகத் தீர்மானம் எடுக்கின்றது.

மின்சாரக் கட்டணம் ஐந்து மடங்கு அதிகரிக்கும் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இறுக்கமான பொருளாதாரக் கொள்கையை நடைமுறைப்படுத்தினால் அரசுக்கு எதிர்க்கட்சி ஆதரவளிக்கும்.

எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்குச் சிறந்த பொருளாதார அறிவுள்ளது.

தற்போதைய நிதி அமைச்சர் பஸில் ராஜபக்ச தன்னிச்சையாகச் செயற்படுகின்றார். இந்தியாவிடமிருந்து பெற்ற கடனைச் செலவு செய்த பின்னர் அவர் கடன் பெறுவதற்காக வேறு ஒரு நாட்டுக்குச் செல்வார்.

ஜனாதிபதியாலோ, பிரதமராலோ பஸில் ராஜபக்சவின் நடவடிக்கைளைக் கட்டுப்படுத்த முடியவில்லை.

ராஜபக்சகளின் குடும்ப ஆட்சியில் பஸிலின் கை மேலோங்கியுள்ளது. குடும்ப ஆட்சி நடத்தும் ராஜபக்சக்கள், நாட்டுக்கு ஒரு சாபம் ஆகும்” – என்றார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
10 3
செய்திகள்உலகம்

ஈரான் மீதான அமெரிக்கத் தாக்குதல்கள் நியாயமானவை: அமெரிக்க வெளியுறவு குழு தலைவர் பிரையன் மாஸ்ட் உறுதி!

அல்ஜெசீரா ஊடகத்திற்கு வழங்கிய நேர்காணலில், மத்திய கிழக்கில் ஈரான் ஆதரவு குழுக்களை இலக்கு வைத்து அமெரிக்கா...

09 3
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மதுபோதையில் இருப்பவர்களால் பெண்களுக்கு அச்சுறுத்தல்: 71% பெண்கள் பொது இடங்களில் பாதுகாப்பற்ற உணர்வு!

மது அருந்தியவர்களினால் பொது இடங்களில் தமக்கு பாதுகாப்பு இல்லை என இலங்கையில் 71 வீதமான பெண்கள்...

08 3
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் எப்போது? பரீட்சை ஆணையாளர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 30 ஆம்...

07 4
செய்திகள்இலங்கைபிராந்தியம்

50,000 ரூபாய் லஞ்ச விவகாரம்: தெஹியத்தகண்டிய கல்விப் பணிப்பாளர் உள்ளிட்ட இருவர் பிணையில் விடுதலை!

பணியில் மீண்டும் இணைந்த ஒருவரின் நியமனக் காலத்தை நீடிப்பதற்காக 50,000 ரூபாயை லஞ்சமாகப் பெற்ற வழக்கில்,...