ராஜபக்ச குடும்பத்தவருக்கு அமைச்சு பதவி!

Rajapaksa 2021.10.06 768x401 1 1

மக்கள் எழுச்சியால் பதவிகளை துறந்து, தீவிர செயற்பாட்டு அரசியலில் இருந்து ஒதுங்கியிருந்த ராஜபக்சக்கள் மீண்டும் தலைகாட்ட ஆரம்பித்துள்ள நிலையில், ராஜபக்ச குடும்பத்தை சேர்ந்த ஒருவருக்கு இராஜாங்க அமைச்சு பதவி வழங்கப்பட்டுள்ளது.

முன்னாள் அமைச்சர் சமல் ராஜபக்சவின் மகனான ஷசீந்ர ராஜபக்ச, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முன்னிலையில் நீர்பாசனத்துறை இராஜாங்க அமைச்சராக நேற்று பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.

மக்கள் எழுச்சியால் ஜனாதிபதி பதவியை துறந்து நாட்டைவிட்டு ஓடிய கோட்டாபய ராஜபக்ச தற்போது நாடு திரும்பியுள்ளார். பாதுகாப்பு உட்பட அவருக்கான அனைத்து ஏற்பாடுகளையும் அரசாங்கம் செய்துகொடுத்துள்ளது.

பிரதமர் பதவியை துறந்த மஹிந்த ராஜபக்சவும், செயற்பாட்டு அரசியலுக்கு வந்துள்ளார்.

அதேபோல நாமல் ராஜபக்சவுக்கு அமைச்சு பதவியை வழங்குமாறு ஆளுங்கட்சியின் பிரதான பங்காளியான ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி, ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பி வைத்துள்ளது.

Exit mobile version