அனைவர் வீடுகளிலும் தேசியக் கொடி ஏற்றுக! – அரசு அறிவிப்பு

istockphoto 177387875 612x612 1

எதிர்வரும் ஓகஸ்டு 15 ஆம் திகதியுடன் இந்தியா சுதந்திரம் அடைந்து 75-வது ஆண்டு பூர்த்தியடைகிறது.

இந்த நிலையில், சுதந்திர தின விழாவையொட்டி கர்நாடக உயர்கல்வி துறை மந்திரி அஸ்வத் நாராயண் அனைத்து உயர்கல்வி நிறுவனங்களுக்கும், கல்லூரி மற்றும் தொழில்நுட்பக் கல்வித் துறையின் கீழ் உள்ள கல்வி நிறுவனங்களுக்கும் சுற்றறிக்கை ஒன்று அனுப்பியுள்ளார்.

அதில் 75-வது சுதந்திர தின விழாவை சிறப்பிக்கும் வகையில் பள்ளி, கல்லூரிகள் உள்பட அனைத்து கல்வி நிறுவனங்களில் படித்து வரும் மாணவ-மாணவிகள் அனைவரின் வீடுகளில் ஓகஸ்டு 11 முதல் 17-ந் தேதி வரை மூவர்ண தேசியக் கொடியை ஏற்ற வேண்டும்.

மேலும் மாநிலத்தில் உள்ள பல்கலைக்கழகங்களின் கீழ் வரும் அனைத்து கல்லூரிகள் மற்றும் நிறுவனங்கள் மற்றும் டி.சி.டி.இ.யின் கீழ் உள்ள அரசு, உதவி பெறும், உதவிபெறாத கல்லூரிகள், டிப்ளமோ கல்லூரிகள் நமது தேசியகொடியை ஏற்றி தங்கள் தேசிய பெருமையை வெளிப்படுத்த வேண்டும் – என தெரிவிக்கப்பட்டுள்ளது.

#IndiaNews

Exit mobile version