வடக்கில் இன்று ரயிலுடன் மோதுண்டு இருவர் உயிரிழந்தனர்.
அதற்கமைய யாழ்ப்பாணம், கோவில் வீதியில் ரயில் முன் பாய்ந்து இளைஞர் ஒருவர் தனது உயிரை மாய்த்தார்.
யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த குளிரூட்டப்பட்ட கடுகதி ரயில் முன் பாய்ந்தே இந்த நபர் உயிரிழந்தார்.
இந்தச் சம்பவம் இன்று பிற்பகல் 2 மணியளவில் இடம்பெற்றது.
மோட்டார் சைக்கிளில் வந்த நபர், அதனை வீதியில் நிறுத்திவிட்டு ரயில் முன் பாய்ந்தார் என அங்கு நின்றவர்கள் தெரிவித்தனர்.
இதேவேளை, மாங்குளம் பகுதியில் ரயிலில் மோதுண்டு யுவதி ஒருவர் உயிரிழந்தார்.
இன்று பிற்பகல் 2 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றது எனப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மாங்குளம் பகுதியைச் சேர்ந்த யுவதியே விபத்துக்குள்ளாகி மரணமானவராவார்.
#SriLankaNews
Leave a comment