ரயில் நிலைய தொழிற்சங்கப் போராட்டம் கைவிடப்பட்டது

BADULLA TRAIN

Sri Lanka, province de Nuwara Eliya, train dans les plantations de thé // Sri Lanka, Ceylon, Central Province, Nuwara Eliya, train in the tea plantation

ரயில் நிலைய பொறுப்பதிகாரிகளின் தொழிற்சங்கப் போராட்டம் கைவிடப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சில கோரிக்கைகளை முன்வைத்து ரயில் நிலையப் பொறுப்பதிகாரிகள் 24 மணித்தியால அடையாள தொழிற்சங்கப் போராட்டமொன்றை முன்னெடுத்தனர்.

இந்த போராட்டம் காரணமாக பயணிகள் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்க நேரிட்டது.

போக்குவரத்து அமைச்சின் செயலாளருடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து தொழிற்சங்கப் போராட்டம் நேற்று நள்ளிரவுடன் கைவிடப்பட்டதாக ரயில் நிலையப் பொறுப்பதிகாரிகள் தொழிற்சங்கத்தின் தலைவர் சுமேத சோமரட்ன தெரிவித்துள்ளார்.

#srilankanews

Exit mobile version