இலங்கைசெய்திகள்

மாணவர்கள் மத்தியில் அதிகரிக்கும் போதைப்பாவனை : சமூகத்தை நோக்கிய முன்னாள் பீடாதிபதியின் வேண்டுகோள்

15 36
Share

இளம் சமுதாயத்தை நாசமாக்க கூடிய போதைப் பாவனையை தடுத்து நிறுத்தி ஒரு ஆரோக்கியான சமுதாயத்தை உருவாக்க நாம் அனைவரும் இந்த கால பொறுப்பை கைகளில் ஏந்த வேண்டும் என யாழ். பல்கலைக்கழக பேராசிரியர் சி. ரகுராம் (S.Raguram) அறைகூவல் விடுத்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், ”பல்கலைக்கழக மாணவர்கள் மத்தியிலான போதைப்பாவனையை தடுத்து நிறுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளவனாக, பல்கலைக்கழக கலைப்பீட மாணவர்கள் ஆரம்பித்துள்ள போதைக்கு எதிரான போராட்டத்திற்கு முழுமையாக ஆதரவு கொடுப்பவனாக சமூகத்திடம் தாழ்மையான வேண்டுகோளை விடுக்க விரும்புகிறேன்.

போதைப்பாவனை எமது சமூகத்தை எல்லா விதத்திலும் பாதித்துள்ளது. பல்கலைக்கழகம் மாத்திரமல்ல, பாடசாலைகள், சமூக நிறுவனங்கள் என ஊடுருவியுள்ள போதைப்பாவனை எங்களுடைய சக்தி மிகு இளம் சமுதாயத்தை சீரழித்து வருகிறது.

இந்த போதைப் பாவனை சுயமாக சிந்திக்க கூடிய எங்கள் இளம் சமூதாயத்தை மிக அசிங்கமான வழியில் சீரழித்துக்கொண்டு இருக்கிறது.போதைப் பாவனையை ஊக்கப்படுத்தும் முயற்சிகளுக்கு எதிராக, அதனை எதிர்த்து நிற்கும் மிக பெரிய சமூக பொறுப்பு எங்களுக்கு இருப்பதாக கருதுகிறேன்.

சக்திமிக்க , உலகத்தையே மாற்றியமைக்க கூடிய மாணவ சமூதாயம் போதைப்பொருளுக்கு அடிமையாகி வருகின்றனர். பாடசாலைகள் இந்த போதைப்பாவனையை தடுத்து நிறுத்த முடியாமல் திகைத்து நிற்கின்றன.

இந்த மண் போதைப் பாவனையற்ற இளம் குருத்துக்களை போதைப்பாவனை அற்ற சமூகமாக உருவாக்கி நின்ற மண். இன்றைக்கும் நாங்கள் வணங்கிப் போற்றுகின்ற மாவீர்ரகளின் ஒழுக்கமுமே

இன்று யாழ்ப்பாண பல்கலைக்கழக கலைப்பீட மாணவர்கள் ஆரம்பித்துள்ள போதைக்கு எதிரான போராட்டம், ஒரு
ஒவ்வொரு கிராமத்திலும் ஒவ்வொரு பாடசாலைகளிலும், சமூகத்தை பற்றி சிந்திக்க கூடியவர்கள் இந்த தருணத்தை எங்களுக்காக ஒதுக்கி, இளம் சமுதாயத்தை நாசமாக்க கூடிய போதைப் பாவனையை தடுத்து நிறுத்தி ஒரு ஆரோக்கியான சமுதாயத்தை உருவாக்குவதற்கான கால பொறுப்பை கைகளில் ஏந்த வேண்டும்.

தனி நபராக சமூகமாக இந்த கால பொறுப்பை பற்றி சிந்தியுங்கள். போதைக்கு எதிராக மிகப்பெரிய செயற்பாட்டை முன்னெடுக்க வேண்டிய கால கட்டமாகும்.

உங்களுடைய ஒவ்வொரு பிள்ளைகளையும் இந்த போதைப் பழக்கத்தில் இருந்து விடுவித்து, எங்கள் சமூகத்தை ஆரோக்கியமான சமூகமாக திடசங்கற்பம் பூணுவோம்“ என தெரிவித்தார்.

Share
Related Articles
15 7
இலங்கைசெய்திகள்

தமிழரசின் பெருவெற்றி – நான் கூறியது நடந்து விட்டது….! மார்தட்டும் சுமந்திரன்

அன்று நான் கூறியது இன்று நிரூபணமாகியுள்ளது என இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளரான ஜனாதிபதி...

16 7
உலகம்செய்திகள்

ஹவுதிகளுக்கு பேரிழப்பு : யேமனின் முக்கிய விமான நிலையத்தை தகர்த்து அழித்தது இஸ்ரேல்

யேமனின் தலைநகரிலுள்ள சர்வதேச விமான நிலையத்தை வான்வழித் தாக்குதல்கள் மூலம் தகர்த்து அழித்துள்ளதாக இஸ்ரேல் இராணுவம்...

13 7
இலங்கைசெய்திகள்

நான் கூறியதை கேட்டிருந்தால் வெற்றி – ரணில் விக்ரமசிங்க

எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து சபைகளில் கூட்டணியாக போட்டியிட்டிருந்தால் ஐம்பது முதல் நூறு எண்ணிக்கையிலான இடங்களை வென்றிருக்க முடியும்...

12 7
இலங்கைசெய்திகள்

பல்கலைகளில் தொடரும் அடாவடித்தனம் : ஆறு மாணவர்கள் அதிரடியாக கைது

சக மாணவர் ஒருவரைத் தாக்கிய குற்றச்சாட்டில் ஸ்ரீ ஜெயவர்தனபுர பல்கலையை (University of Sri Jayewardenepura)...