அனைத்து தமிழ் அரசியல் கைதிகளுக்கும் விரைவாக விடுதலை! -நாமல் உறுதி

1605415571 namal 2

தடுத்துவைக்கப்பட்டுள்ள அனைத்து தமிழ் அரசியல் கைதிகளையும் விடுதலை செய்ய ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்‌ச விரைவான நடவடிக்கைகளை எடுத்துவருகிறார் என அமைச்சர் நாமல் ராஜபக்‌ச தெரிவித்துள்ளார் .

அத்துடன், அரசாங்கங்கத்துக்கு இளைஞர்களை கைதுசெய்து தடுத்துவைக்க வேண்டிய தேவை இல்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மட்டக்களப்பு வந்தாறுமூலை பகுதிக்கு நேற்றைய தினம் விஜயம் மேற்கொண்டிருந்த அவர் ஊடகங்களிடம் இவ்வாறு கூறியுள்ளார். தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,.

தேவையற்ற விதமாக இளைஞர்களை கைதுசெய்து தடுத்துவைக்கவேண்டிய அவசியம் அரசாங்கத்துக்கு இல்லை, தெரியாது செய்த குற்றங்களுக்காக கைதாகி தடுப்பிலுள்ள இளைஞர்களை விரைவாக விடுவிக்க அரசாங்கம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

இளைஞர்கள் நாட்டின் பெறுமதியான சொத்துக்கள். தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்வோம் எனக் கூறி ஆட்சிக்கு வந்த அரசாங்கத்தால் அதிக விடயங்கள் செய்யமுடியவில்லை.

இந்நிலையில், அரசியல் கைதிகள் விடுதலை தொடர்பில் பல விடயங்களை பின்பற்ற வேண்டும் இதுவரையில் 16 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

பேஸ்புக்கில் புகைப்படங்களை பதிவிட்டமைக்காக கைதாகியவர்களை நீதித்துறையுடன் பேசி விடுதலை செய்வதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்படும், கைதிகளுக்கு புனர்வாழ்வளிக்கப்பட்டு சமூகத்துடன் இணைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.

சட்டவிரோதமான நடவடிக்கைகள் தொடர்பாக தெரியவந்தால் பொலிஸில் முறைப்பாடு செய்யுங்கள். சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் முன்வரவேண்டும் – என அமைச்சர் நாமல் ராஜபக்‌ச அழைப்பு விடுத்துள்ளார் .

Exit mobile version