2022 கல்விப் பொது தராதர பரீட்சையின் வினாத்தாள்களை திருத்தும் ஆசிரியர்களை இணைப்பதற்கான விண்ணப்ப படிவங்களை அனுப்பும் திகதி நீடிக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதன்படி, எதிர்வரும் 4 ஆம் திகதி வரை விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படுமென குறிப்பிடப்பட்டுள்ளது.
விண்ணப்ப படிவங்களை www.doenets.lk என்ற இணையத்தளத்தினுள் பிரவேசிப்பதன் மூலம் பெற்றுக்கொள்ள முடியும்.
இவ்விடயம் தொடர்பான மேலதிக தகவல்களைப் பெற்றுக்கொள்வதற்கு 011 2785231 மற்றும் 011 2785216 என்ற தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்பினை மேற்க்கொள்ள முடியும் என பரீட்சைகள் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
#SriLankaNews
Leave a comment