விவசாயிகளுக்கும் QR முறை

HelloTech qr code 1024x1024 1

எதிர்காலத்தில் விவசாயிகளுக்காக QR கோட்டா முறை அறிமுகப்படுத்தப்படும் என விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

QR முறையைப் பயன்படுத்துவதன் மூலம் விவசாயிகளுக்கு உரம் மற்றும் விதைகளைப் பெறுவதற்கான வாய்ப்பைப் கிடைக்கும் என அமைச்சர் குறிப்பிட்டார்.

ஹெக்டேர் கொப்பேகடுவ விவசாய ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இங்கு மேலும் கருத்து தெரிவித்த அமைச்சர், உரப்பிரச்சினையினால் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இந்த வருடமும் உரங்களுக்கு மேலதிகமாக அவர்களுக்கு நிவாரணம் வழங்கப்படும் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.

#SriLankaNews
Exit mobile version