மைத்திரிக்கு தங்க வாளை பரிசளித்த புடின்

tamilnaadi 72

மைத்திரிக்கு தங்க வாளை பரிசளித்த புடின்

ரஷ்ய ஜனாதிபதி புடின் தனக்கு இரத்தினக் கற்கள் பதித்த தங்க வாளை பரிசாக வழங்கியதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதியாக ரஷ்யாவிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டிருந்த போது இந்த விருது வழங்கப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.

தற்போது அந்த வாள் கொழும்பு அருங்காட்சியகத்திற்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை அண்மையில் மைத்திரிபால சிறிசேனவின் மகள் வீட்டில் இடம்பெற்ற திருட்டு சம்பவத்தில் ஒரு தங்க குதிரை காணாமல் போனதாக செய்தி வெளியாகியிருந்தது.

இது தொடர்பில் பதிலளித்த அவர், மூத்த மகளின் வீட்டில் தங்கக் குதிரை இருந்ததாகக் கூறப்படும் கதை பொய் என்றும், அந்த வீட்டில் உணவும், பானமும் மாத்திரமே திருடப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Exit mobile version