நெல் சந்தைப்படுத்தல் சபையினால் நாளை முதல் கொள்வனவு செய்யப்படவுள்ள நெல்லின் புதிய விலைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
அதற்கமைய, ஒரு கிலோகிராம் நாடு நெல்லை 120 ரூபாவுக்கு கொள்வனவு செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், சம்பா நெல்லை 125 ரூபாவுக்கும், கீரி சம்பா நெல்லை 130 ரூபாவுக்கும் கொள்வனவு செய்யவுள்ளதாகவும் விவசாய அமைச்சு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
#SriLankaNews

