நாடு முழுவதும் வழமைபோன்று இன்று பொதுப் போக்குவரத்து சேவைகள் இடம்பெறுகின்றன என்று போக்குவரத்து அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
இன்று தொழிற்சங்கங்கள் மேற்கொள்ளும் பணிப்பகிஷ்கரிப்புப் போராட்டத்தில் ரயில்வே மற்றும் இலங்கை போக்குவரத்து சபை பஸ் தொழிற்சங்கங்கள் கலந்துகொள்ளவிலை. அத்துடன் தனியார் பஸ் சேவைகளும் இந்தப் பணிப்பகிஷ்கரிப்பில் இணைந்துகொள்ளவில்லை. எனவே, பொதுப் போக்குவரத்து சேவைகள் இன்று வழமைபோன்று இடம்பெறும்.
இன்று போக்குவரத்து சேவைகளில் ஈடுபடும் வாகனங்களுக்குத் தேவையான பாதுகாப்பை வழங்குமாறு பொலிஸ்மா அதிபரிடம் அறிவுறுத்தியுள்ளேன்” – என்றார்.
#SriLankaNews

