ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்டுள்ளதால், ரயில் சேவைகள் வழமைக்குத் திரும்பியுள்ளன என்று ரயில் திணைக்களம் இன்று காலை அறிவித்துள்ளது.
அதேநேரம், 15 சதவீத தனியார் பஸ்கள் இன்று சேவையில் ஈடுபடுகின்றன என்று தனியார் பஸ் உரிமையாளர் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரட்ன தெரிவித்துள்ளார்.
அருகில் உள்ள இலங்கை போக்குவரத்துச் சபையில் தனியார் பஸ்களுக்கான எரிபொருளைப் பெற்றுக்கொள்ள முடியும் என்று போக்குவரத்து அமைச்சும், இலங்கை போக்குவரத்துச் சபையும் தமக்கு அறியப்படுத்தியுள்ளனர் எனவும் அவர் குறிப்பிட்டார்.
அதேநேரம், இலங்கை போக்குவரத்துச் சேவைக்குச் சொந்தமான பஸ்களும் வழமைக்கு திரும்பியுள்ளன அதன் தலைவர் கிங்ஸ்லி ரணவக்க தெரிவித்துள்ளார்.
#SriLankaNews
Leave a comment