சட்டத்துக்கு முரணான வகையில் அரிசி, சீனி உள்ளிட்ட அத்தியாவசிய உணவுப் பொருள்களை பதுக்கினால் அவற்றை மீட்டு மக்களுக்கு நிவாரண விலைக்கு வழங்குவதற்கு நடவடிக்கை எடுங்கள்.
இதனை அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகம் மேஜர் ஜெனரல் எம்.டீ.எஸ்.பி.நிவுன்ஹெல்ல தெரிவித்துள்ளார்.
நெல், அரிசி மற்றும் சீனி உள்ளிட்ட அத்தியாவசிய உணவுப் பொருள்களை பதுக்குதல், விநியோகத்தை தவிர்த்தல், அதிக விலைக்கு விற்பனை செய்தல் உள்ளிட்ட மக்களை அசௌகரியத்திற்துக்கு உள்ளாக்கும் செயற்பாடுகளையும் தடுப்பதற்காக ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச பொதுமக்கள் கட்டளை சட்டத்தின் கீழ் அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளார்.
அதற்கமைய சட்டத்துக்கு புறம்பாக பொருள்களை பதுக்கி அவை இனங்காணப்பட்டால், அவற்றை கைப்பற்றி மக்களுக்கு நியாயமான விலைக்கு விநியோகிப்பதற்கு சகல மாவட்ட அரசாங்க அதிபர்களும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

