புதனன்று அரச ஊழியர்கள் தொழிற்சங்கப் போராட்டம்!

protest

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ச உள்ளிட்ட ராஜபக்ச குடும்பத்தினர் அனைவரும் பதவி விலக வேண்டும் என்று போராட்டக்காரர்கள் வலியுறுத்தி வருகின்ற நிலையில், நாளை திங்கட்கிழமை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ச ஆகியோரைப் பிரதானமாகக் கொண்டு 15 பேர் அடங்கிய அமைச்சரவை ஒன்று ஸ்தாபிக்கப்படவுள்ளது.

ஜனாதிபதியும் பிரதமரும் தொடர்ந்தும் பதவியில் இருப்பதற்கு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்ற நிலையில் அரச ஊழியர்கள் தமது கடுமையான எதிர்ப்பை வெளிப்படுத்துவதற்குத் தீர்மானித்துள்ளனர்.

அந்தவகையில் எதிர்வரும் 20ஆம் திகதி புதன்கிழமை நாடு தழுவிய தொழிற்சங்கப் போராட்டம் ஒன்று இடம்பெறவுள்ளது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

#SriLankaNews

Exit mobile version