அதானி குழுமத்துடனான உடன்படிக்கைக்கு எதிராகப் போராட்டம்!

protest

மீள் புதுப்பிக்கத்தக்க சக்தி செயற்றிட்டத்துக்காக அதானி குழுமத்துடன் ஏற்படுத்திக்கொள்ளப்படவுள்ள உடன்படிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்து கொழும்பு – பம்பலப்பிட்டியில் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.

குறித்த உடன்படிக்கை வௌிப்படைத்தன்மையுடன் அமையவில்லை என எதிர்ப்பில் ஈடுபட்ட மக்கள் தெரிவிக்கின்றனர்.

இன்று பிற்பகல் 2.30 முதல் பம்பலப்பிட்டியில் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் காரணமாக குறித்த பகுதியில் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளது.

ஆர்ப்பாட்டம் காரணமாக பம்பலப்பிட்டியில் ஏற்பட்டுள்ள போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்தும் நோக்குடன் பொலிஸார் செயற்பட்டு வருகின்றனர்.

 

Exit mobile version