tamilni 17 scaled
இலங்கைசெய்திகள்

கோட்டாபய வீட்டிற்கு முன் போராட்டம் : தெரியாது என கைவிரித்தார் சட்டமா அதிபர்

Share

2022 ஆம் ஆண்டு நடைபெற்ற போராட்டத்தின் போது முன்னாள் அதிபர் கோட்டாபய ராஜபக்சவின்(Gotabaya Rajapaksa) மிரிஹானில் உள்ள தனியார் இல்லத்திற்கு அருகில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டங்கள் மற்றும் கலவரங்கள் தொடர்பில் புலனாய்வுத் தகவல் எதுவும் கிடைக்கவில்லை என சட்டமா அதிபர் உச்ச நீதிமன்றில் தெரிவித்துள்ளார்.

சட்டமா அதிபர் சார்பில் முன்னிலையான சிரேஷ்ட அரச சட்டத்தரணி ஷமிந்த விக்ரம(Shaminda Wickrama), செயற்பாட்டாளர்கள் குழுவினால் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் மீதான விசாரணையின் போது, ​​நீதியரசர் யசந்த கோதாகொட(Yasanta Kodagoda) எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

போராட்டத்தின் போது அவர்கள் கைது செய்யப்பட்டதற்கு எதிராக நேற்று (18) விசாரணை நடத்தப்பட்டது.

விஜித் மலல்கொட மற்றும் யசந்த கோதாகொட ஆகியோர் அடங்கிய உச்ச நீதிமன்ற அமர்வு முன்னிலையில் இந்த மனுக்கள் நேற்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன. சட்டமா அதிபர் சார்பில் முன்னிலையான சிரேஷ்ட அரசாங்க சட்டத்தரணி ஷமிந்த விக்ரம, நீதிமன்றத்தில் உண்மைகளை முன்வைக்கும் போது அது தொடர்பான போராட்டம் எவ்வாறு ஆரம்பமானது என்பதை விளக்கியுள்ளார்.

அப்போது, ​​அரசு சட்டத்தரணியிடம் கேள்வியொன்றை முன்வைத்த நீதிபதி யசந்த கோதாகொட, போராட்டம் தொடங்குவதற்கு முன், அது தொடர்பான தகவல்கள் புலனாய்வு அமைப்புகளுக்கு கிடைத்ததா என்று கேட்டார்.

இதற்குப் பதிலளித்த அரசாங்கத்தின் சிரேஷ்ட சட்டத்தரணி, இவ்வாறான புலனாய்வுத் தகவல்கள் பாதுகாப்புப் படையினருக்குக் கிடைக்கவில்லை எனத் தெரிவித்தார்.

அப்போது அரசு வழக்கறிஞர் இந்த போராட்டம் தொடர்பான காணொளி நாடாக்களை திறந்த நீதிமன்றத்தில் காட்சிப்படுத்தி உண்மைகளை முன்வைத்தார்.

2022 ஆம் ஆண்டு மார்ச் 31 ஆம் திகதி மிரிஹானிலுள்ள அப்போதைய அதிபர் கோட்டாபய ராஜபக்சவின் தனிப்பட்ட இல்லத்தைச் சுற்றியிருந்த போராட்டத்தின் போது காவல்துறையினர் தம்மை அநியாயமாக கைது செய்ததன் மூலம் தமது அடிப்படை மனித உரிமைகளை மீறியுள்ளதாக தீர்ப்பளிக்கக் கோரி இந்த அடிப்படை உரிமை மனு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

 

Share
தொடர்புடையது
army are
இலங்கை

போதைப்பொருளுடன் கைதான முன்னாள் ராணுவ சிப்பாய்.

கம்பஹா மாவட்டம், கந்தானை பிரதேசத்தில் 120 கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் மகரை பிரதேசத்தை சேர்ந்த 56...

body 2
இலங்கை

மூன்று பிள்ளைகளின் தந்தை மூன்று நாட்களின் பின் சடலமாக மீட்பு.

மொனராகலை மாவட்டம், படல்கும்புரை பிரதேசத்தில் வீட்டிலிருந்து வெளியே சென்ற நிலையில் காணாமல்போயிருந்த குடும்பஸ்தர் ஒருவர், மூன்று...

acdent 19
இலங்கை

இளைஞர்களின் உயிரைக்குடித்த வேகம்.

  இன்று அதிகாலை சுமார் 2.30 மணியளவில் ஹொரணை – மொரகஹஹேன வீதியில் இடம்பெற்ற விபத்தில்...

fire 19
இலங்கை

அதிகரித்துள்ள வெப்பத்திற்கு மத்தியில் இரத்மலானை குடியிருப்பு வளாகமொன்றில் தீ பரவல்.

இரத்மலானை பொருளாதார மத்திய நிலையத்துக்கு அருகிலுள்ள குடியிருப்பு வளாகமொன்றில் இன்று தீப்பரவல் ஏற்பட்டுள்ளதாக தகவல் கிடைத்ததைத்...