தையிட்டியில் மீண்டும் ஆரம்பமான போராட்டம்

rtjy 33

தையிட்டியில் மீண்டும் ஆரம்பமான போராட்டம்

யாழ்ப்பாணம் தையிட்டியில் பொதுமக்களின் காணிகளை அபகரித்து கட்டப்பட்ட விகாரைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இந்த போராட்டம் 04.11.2023 முன்னெடுக்கப்பட்டுள்ளது.

தையிட்டி விகாரையில் நாளையும் நாளை மறுதினமும் நடைபெறவுள்ள விசேட நிகழ்வுகளை முன்னிட்டு, மீண்டும் கவனயீர்ப்புப் போராட்டம் ஆரம்பமாகியுள்ளது.

இந்த போராட்டத்தில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப் பேச்சாளர் கனகரத்தினம் சுகாஷ் உள்ளிட்ட கட்சியின் உறுப்பினர்கள் கலந்துகொண்டுள்ளதுடன் போராட்டத்திற்கு வலுச்சேர்க்குமாறு சட்டத்தரணி சுகாஷ் அழைப்பு ஒன்றையும் விடுத்துள்ளார்.

Exit mobile version