பாதுகாப்பை உறுதிப்படுத்துக! – நெடுந்தீவில் போராட்டம்

நெடுந்தீவில் பாதுகாப்பை உறுதிப்படுத்த கோரி நெடுந்தீவு பிரதேச செயலகம் முன்பாக அப்பகுதி மக்களால் இன்று திங்கட்கிழமை கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது நெடுந்தீவு பிரதேச செயலாளர் ஊடாக நெடுந்தீவு பொலிஸாருக்கு மகஜரும் அனுப்பபட்டது.

அந்த மகஜரில்,நெடுந்தீவு மக்களின் பாதுகாப்பை கருத்திற்கொண்டு நெடுந்தீவு காவல் நிலையத்தால் ஒவ்வொரு சமூகத்திடமும் காவல் நிலைய சட்டத்தின் ஊடாக விழிப்புக்குழுக்கள் உருவாக்கப்பட வேண்டும்.

நெடுந்தீவின் பொது இடங்கள் இறங்குதுறை மற்றும் மனித நடமாட்டம் அதிகமாக உள்ள இடங்கள், சுற்றுலா தளங்கள் அனைத்திற்கும் கண்காணிப்புக் கமராக்கள் பொருத்தப்படல் வேண்டும்.

நெடுந்தீவு காவல் நிலையத்தால் வரையறுக்கப்பட்ட நெடுந்தீவு இடங்களை ரோந்துப் பணியினூடாக கண்காணிப்பதற்கு இடைவிடாது ஒவ்வொரு நாளும் காவல் நிலையத்தால் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்.

நெடுந்தீவின் சுற்றுலா தளங்களிற்கு ஒவ்வொரு நாளும் சென்று நெடுந்தீவு காவல் நிலைய அதிகாரிகளால் கண்காணிக்கப்பட வேண்டும்.

வெளியூர்களில் இருந்து வந்து நெடுந்தீவின் விடுதிகளில் தங்குபவர்கள் விடுதி உரிமையாளர்களால் பூரண ஆள் அடையாளத்திற்கு உட்படுத்தல் நெடுந்தீவு காவல் நிலையத்தால் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்.

நெடுந்தீவுக்கு உள்ளே வரும் வெளியே செல்லும் மக்களின் தரவுகளை நவீன தொழிநுட்பத்துடன் கொண்டு பயணிகளை சிரமப்படுத்தாது அதிவிரைவாக தரவுகளை இறங்குதுறையில் வைத்து சேமித்து கொள்ளும் நடைமுறையை கொண்டுவர வேண்டும் – என்றுள்ளது.

IMG 20230424 WA0012

#SriLankaNews

Exit mobile version