ஊடக அடக்குமுறையை கண்டித்து பல்கலை மாணவர்கள் போராட்டம்!

University of Jaffna 1

கொழும்பில் ஊடகவியலாளர்கள் தாக்கப்பட்டமையை கண்டித்தும் அதற்கு நீதி கோரும் வகையிலும் யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களால் இன்றைய தினம் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

இன்று நண்பர்கள் 12 மணியளவில் யாழ்ப்பாண பல்கலைக்கழக பிரதான நுழைவாயிலுக்கு முன்பாக ஒன்றுகூடிய மாணவர்கள் வாயில் கறுப்புத் துணிகளை கட்டியவாறும் பதாகைகளை தாங்கியவாறும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் இல்லத்திற்கு முன்னால் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளர்கள் தாக்கப்பட்டமையை கண்டித்தே குறித்த போராட்டம் இடம்பெற்றது.

அடக்குமுறை வேண்டாம், அரசே பதில் கூறு, ஊடகவியலாளர்களுக்கு நீதி வேண்டும் போன்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை மாணவர்கள் தாங்கிப் பிடித்திருந்தனர்.

#SriLankaNews

Exit mobile version